தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ச முரசொலி Bsc., LLB., அவர்கள் இன்று டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து,
1. திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயிலினை நிரந்தரமாக தினசரி இயக்கவும்,
2. தாம்பரம் - ராமேஸ்வரம் ரயிலினை பட்டுக்கோட்டை - பேராவூரணி வழிதடத்தில் இயக்கவும்,
3. தஞ்சாவூர் - பெங்களூர் வந்தே பாரத் புதிய ரயிலினை இயக்கவும்,
4. மன்னார்குடி - சென்னை வந்தே பாரத் புதிய ரயிலினை தஞ்சாவூர் வழியாக இயக்கவும்,
5. மதுரை - புனலூர் ரயிலினை தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணி வரையில் இயக்கிடவும்,
6. சென்னை - எழும்பூர் (காரைக்குடி கம்பன்) விரைவு வண்டியினை மீண்டும் இயக்குவதற்கும்,
7. தாம்பரம் - செங்கோட்டை விரைவு வண்டியை வாரம் ஏழு நாட்கள் இயக்கவும்,
8. மன்னார்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - புதுக்கோட்டை , தஞ்சாவூர் - அரியலூர் ஆகிய புதிய ரயில் வழித்தடங்களை அமைத்திடவும்,
9. திருச்சி - பாலக்காடு பேசஞ்சர் மற்றும் திருச்சி - ஹௌரா விரைவு வண்டியினை, தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்யவும்,
10. தஞ்சாவூர் - விழுப்புரம் மெயின் லைனை ஒரு வழி பாதையில் இருந்து இருவழிப்பாதையாக அமைப்பதற்கும்,
11. அதிராம்பட்டினம், பேராவூரணி, பூதலூர், ஆலக்குடி, அய்யனாபுரம், நீடாமங்கலம், பாபநாசம் ஆகிய ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்கள் நிறுத்தம் செய்வது மற்றும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தார்.
Ariyalur via tanjure, pattukkottai, mallipattinam monora. Passgenger trai new raillway track project sir.
ReplyDeleteAdirampattinam via mallipattinam, kattumavadi, manamalkudi, koottaipattinam, mimesal, thondi, devipattinam, ramanathapuram. EAST COAST Raillway PROJECT sir.
ReplyDeletePost a Comment