15 மாதங்களாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது.!

 


கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் நிறுத்தம் மற்றும் பணய கைதிகளை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக இஸ்ரேல் கொடுத்த நிபந்தனைகள் தொடர்பாக கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பதற்கு முன்னதாக போர் நிறுத்தம் தொடர்பாக வாய்மொழி ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதால் போர் வெடித்தது. ஹமாஸை அழிக்க இஸ்ரேல் காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது.

இந்த போரின் போது 46,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், கூறுகிறது.

94 பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் இருப்பதாகவும், 34 பேர் இறந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது

கூடுதலாக, நான்கு இஸ்ரேலியர்கள் போருக்கு முன்னர் கடத்தப்பட்டனர், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது

காஸாவில் இன்னும் மோசமான சூழல் நீடிக்கிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கையெழுத்திட்டதையடுத்து பாலஸ்தீன மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.






Post a Comment

Previous Post Next Post