மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு(படங்கள் இணைப்பு).!




தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,மல்லிப்பட்டினம் பாரம்பரிய விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர் சங்கங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மீனவர் வாரிய துணைத்தலைவர் தாஜூதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி நெப்போலியன் மற்றும் விசைப்படகு சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் ஆகியோர் கலந்துக்கொண்டு திமுக அரசு மேற்கொண்டு வரும் மக்களுக்கான திட்டங்கள்,மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் துணை முதல்வர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இறுதியாக மல்லிப்பட்டினம் திமுக கிளை செயலாளரும்,மாவட்ட பிரதிநிதியுமான ஹபீப் முகமது நன்றியுரையாற்றினார்.

மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் விசைப்படகு,நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள்,மனிதநேய மக்கள் கட்சி,திமுக,காங்கிரஸ் பிரமுகர்கள்,மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள், ராமர் கோவில் தெரு கிராமத்தார்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.



























Post a Comment

Previous Post Next Post