பட்டுக்கோட்டையில் நள்ளிரவில் பள்ளியின் பூட்டை உடைத்து ரூ. 25,000 பணம் திருட்டு போனது குறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் புனித தாமஸ் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்குள் நேற்று (ஜனவரி 8) இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல் இன்று (ஜனவரி 9) காலை பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் தனது அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தில் இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 25,000 பணம் திருடு போய் இருந்தது. இது தொடர்பான பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் மோப்பநாயக் உதவியுடன் குற்றவாளியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment