தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம், கடல் பசு பாதுகாப்பகம் பாக் நீரிணை, ஓம்கார் பவுண்டேஷன், இந்திய வன உயிரின நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், மாவட்ட வன அலுவலர் ஆனந்த குமார் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள மனோராவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சூழல் உலா என்ற தலைப்பில் குளிர்கால இயற்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ. எஸ். சந்திரசேகரன் தலைமை வகித்தார். வனவர் சிவசங்கர் வரவேற்றார். 10 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சுற்றுச்சூழலை பாதுகாப்போம், இயற்கையை பாதுகாப்போம், மரம் வளர்ப்போம் என உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில்,கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் ஆராய்ச்சி உபகரணங்கள் குறித்த கண்காட்சி மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், இயற்கை தொடர்பான விழிப்புணர்வு வினாடி - வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆராய்ச்சியாளர் அருண் சங்கர், உதவியாளர் பிரவீன், சேதுபாவாசத்திரம் காவல்துறை உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், கடலோர பாதுகாப்பு குழு உதவி ஆய்வாளர்கள் நவநீதன், சுப்பிரமணியன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
Post a Comment