அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர நியாய விலைகடைகளில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு பொருட்கள் நகர செயலாளர் அஸ்லம் துவக்கி வைத்தார்.
பொங்கல் தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வருவதை தடுக்க, எந்த தேதி, நேரம் கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய 'டோக்கன்'கள், வீடுகளில் வழங்கப்பட்டுள்ளன.
வரும் 2025 தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை,வேட்டி,சேலை மற்றும் முழு கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் அதிராம்பட்டினம் திமுகவின் மேற்கு நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.இதில் நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் வார்டு கழக செயலாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment