புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய திரு.ஜகபர் அலி.அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப உதயகுமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.மேலும் கொல்லப்பட்ட ஜகபர் அலி. அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர் பின்னர் ஜகபர் அலி குடும்பத்தினரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததோடு இந்த இந்த படுகொலைக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி களத்தில் நிற்கும் என்பதை குடும்பத்தினரிடம் வேல்முருகன் உறுதியளித்தார்.
Post a Comment