பேராவூரணி புகையிலை பொருட்கள் விற்பனை 4 பேர் கைது.!

 



தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பழைய பேராவூரணி பகுதியில் பாண்டிக்கண்ணு மற்றும் அவருடைய மகன் பழனிகுமார் ஆகிய இருவரும் தங்கள் கடையில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத் துறையினர் 25,000 அபராதம் விதித்தனர். 


இதேபோல் புதிய பேருந்து நிலையம் அருகே சின்னையா என்பவர் கடையில் சோதனை செய்து சின்னையா அவரது மகன் சரவணகுமாரன் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து இரண்டாவது முறையாக போதைப்பொருள் விற்பனை செய்ததால் 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

முத்துராமன் என்பவர் கடையில் 10 பாக்கெட் ஹான்ஸ் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டு 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. முத்துராமன் தவிர மற்ற நால்வரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கடைகள் தற்காலிகமாக 15 நாட்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

Post a Comment

Previous Post Next Post