கடந்த வாரம் ஒரே நாளில் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம், கொண்டிக்குளம், பட்டுக்கோட்டை நகர், வாட்டாத்திக்கோட்டை ஆகிய இடங்களில் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நசீர், எஸ்ஐ ராம்குமார் மற்றும் தனிப்படையினர் கொள்ளை நடந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ஆலடிக்குமுலைப்பகுதியில் காவல்துறை வாகன சோதனையில் மூன்று இளைஞர்கள் போலீசார் கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தொடர்ந்து அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்கி வசந்த் (20), அயனாவரத்தைச் சேர்ந்த பகுருதீன் (வயது 18) வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இமானுவேல் என்ற வெள்ளை விஜய் (27) என்பது தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரும் ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது.
இவர்களை கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை விரைவாக பிடித்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் நசீர், எஸ்ஐ ராம்குமார் மற்றும் தனிப்படையினரை மாவட்ட எஸ்பி ராஜாராம் பாராட்டினார்
Post a Comment