தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெரு அங்கன்வாடி அருகே உள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது.
மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவில் பயன்படுத்தப்படாத துணை சுகாதர நிலையம் அருகே அங்கன்வாடி அருகே குப்பைகள் தேங்கி இருப்பதால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என மல்லி நியூஸ் வாயிலாக செய்தி வெளியிட்டோம், அதேபோல் அப்பகுதி மக்கள் கோரிக்கையின் பேரில் கிராமசபாவில் தீர்மானமும் இயற்றினர்.
இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலர் தட்சிணாமூர்த்தி மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு அப்பகுதியில் தேங்கி இருந்த குப்பைகள் அகற்றப்பட்டது.
நோய் தொற்று பரவக்கூடிய அபாயம் இருந்த குப்பைகளை அகற்றிய அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.இதில் முன்னாள் ஊராட்சிமன்ற துணை தலைவர் மாசிலாமணி, நூருல் ஹமீது ஆகியோர் அதிகாரிகளுடனிருந்தனர்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
ReplyDeletePost a Comment