மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் செய்தியானது
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் அனைத்து கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்க அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது.சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது, சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரையில் விட்டு விட்டு வாசிப்பது, சட்டமன்றத்தின் மரபைப் பேணாமல் வெளிநடப்பு செய்வது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வது என்று தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு விரோதமாக நடந்து கொண்டிருக்கும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்து அவரின் செயல்பாடுகளுக்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறோம் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment