புதுப்பட்டினம் ஈசிஆர் சாலையில் பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து.!

 


தஞ்சை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே மகேந்திரா பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து.

காரைக்காலில் இருந்து தொண்டி நோக்கி போர்வெல் அமைக்கும் பணிக்காக கனரக இரும்பு பைப்களை கொண்டு சென்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த ஏழு பேரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதி இளைஞர்கள் விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.






Post a Comment

Previous Post Next Post