SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு மல்லிப்பட்டினம் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முஹம்மது புஹாரி அனைவரையும் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையுரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் தமிழ் மாநில பொது செயலாளர் அபு பக்கர் சித்திக் சிறப்புரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்து கலந்து கொண்ட தமிழ் மாநில பொது செயலாளர் அபு பக்கர் சித்திக் மற்றும் தேசிய பொது குழு உறுப்பினர் & தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர்க்கு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக சால்வை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் அஹமது அஸ்லம், மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அசாருதீன், மாவட்ட செயலாளர்கள் முஹம்மது ரஹீஸ் மற்றும் ரியாஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் முஹம்மது அஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹமது நன்றி கூறினார்.
Post a Comment