மல்லிப்பட்டினம் பொங்கல் தொகுப்பு திட்டம் ஜமாஅத் தலைவர் துவக்கி வைப்பு.!

 


தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டடினம் நியாய விலைக்கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மல்லிப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

பொங்கல் தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வருவதை தடுக்க, எந்த தேதி, நேரம் கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய 'டோக்கன்'கள், வீடுகளில் வழங்கப்பட்டுள்ளன.

வரும் 2025 தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை,வேட்டி,சேலை மற்றும் முழு கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

ஜமாத் தலைவர் அல்லா பிச்சை ஜமாத் செயலாளர் அப்துல் ரஹீம்,திமுக பிரமுகர் மைதீன் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.





Post a Comment

Previous Post Next Post