தஞ்சை மாவட்டம் சரபேந்திராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி ரஹ்மத் நிஷா மற்றும் கமால் பாட்ஷா ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
சரபேந்திராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை, ஊராட்சிகுட்பட்ட பகுதிகளிர் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது, குடிநீர் பைப் உடைந்து சாக்கடை நீருடன் கலந்து குடிநீர் வருகிறது, சில பகுதிகளில் சாலை வசதிகள் இல்லாமல் இருக்கிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையை நிறைவேற்றி தருவதாகவும் கூறினார்.
சிறப்பு
ReplyDeletePost a Comment