புதுச்சேரியில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு.!




 தமிழ்நாடு மீனவர் பேரவையின் 16வது மாநில செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் ஹோட்டல் ஆனந்தா இன் னில் நடைபெற்றது.

மாநில செயற்குழுவிற்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனர் தலைவர் இரா.அன்பழகனார் தலைமையில் நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர்,தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத்தலைவர் தாஜூதீன்,தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புதியதாக நிர்வாகிகள் சிலர் நியமனம் செய்யப்பட்டனர்.இதில் மீனவர்கள் சந்தித்து இருக்கும் பிரச்சனைகள்,இலங்கையில் கைது செய்யப்படும் மீனவர்கள் குறித்தும் விவாதிகப்பட்டது.

மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொறுப்பில் உள்ளவர்கள் கலந்துக்கொண்டனர்.தமிழ்நாடு மீனவர் வாரிய துணைதலைவராக செயல்பட்டு வரும் தாஜூதீனுக்கு பாராட்டுக்களும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.








Post a Comment

Previous Post Next Post