தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவில் உள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மல்லிப்பட்டினத்தில் பிரசதிப்பெற்ற கோதண்டராமர் கோவில் உள்ளது, கோவில் செல்லும் வழியில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் தேங்கி இருப்பதால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.குப்பைமேடு எதிரே பொதுமக்கள் பயன்படுத்தும் குளமும் உள்ளது.
மேலும் இந்த குப்பைமேடு அருகே தான் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
இதனால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் , மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment