தஞ்சை மாவட்டம் சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 76 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தேசியக்கொடி ஏற்றினார்.தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி மாணவ,மாணவிகள் குடியரசு தின வரலாறுகள் குறித்து பேசினர்.தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக பள்ளி மேலாண்மை குழுவினர்,மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள்,ராமர் கோவில் தெரு பிரமுகர்கள் ஆகியோர் கலந்ததுக்கொண்டனர்.
இறுதியாக பள்ளியின் ஆசிரியர் மகேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.
Post a Comment