சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டினம் பகுதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்.!

 


தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி தனிச்செயலாளர் தெட்சிணாமூர்த்தி ஊராட்சியின் கடந்த கால பணிகள் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து வாசித்தார்.அதற்கு பிறகு ஊராட்சிமன்றத்தில் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக காசிம் அப்பா தெரு,காயிதே மில்லத் நகர் ஆகிய மல்லிப்பட்டினத்தில் உள்ள ஆண்டிக்காடு ஊராட்சி பகுதிகளை சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் இணைக்க வேண்டும்,ஷாபி இமாம் தெரு பகுதிகளில் சுகாதர பணிகளை மேற்கொள்ள வேண்டும்,நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

இந்நிகழ்வில் ஓவர்சியர் பிரபு,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்,துணைத்தலைவர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.






Post a Comment

Previous Post Next Post