தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் 76வது குடியரசு தினத்தை கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் கொண்டாடினர்.
எஸ்டிபிஐ கட்சியின் மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாஹீர் தலைமை வகித்தார். கிளை 2 தலைவர் அப்துல்லா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் முகமது அஸ்கர் கலந்துக்கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
கட்சியின் கிராம பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் ஹாமீம் பைசல் நன்றியுரையாற்றினார்.
Post a Comment