அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி.!

 


ஜன-05 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் எதிர்வரும் பிப்-02 தஞ்சை மாநகரில் நடைபெற இருக்கும் மாபெரும் வஃக்பு உரிமை மீட்பு மாநாடு சம்பந்தமாக அனைத்து மட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி அதிரை நகர எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது ரஹீஸ் தலைமையில் நடைபெற்றது.

 சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ரியாஸ் அஹமது அனைத்து நிர்வாகிகளையும் வரவேற்க, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது ரஹீஸ் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாநாடு சம்பந்தமான அனைத்து ஏற்பாடுகளையும் கேட்டறிந்தும் பல்வேறு திட்டமிடுதல் சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஷாகுல் ஹமீது மற்றும் மாவட்ட பொது செயலாளர் ஷேக் தாவுது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதித் தலைவர் அஹமது அஸ்லம் நன்றி கூறினார்.






Post a Comment

Previous Post Next Post