அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.!

 


அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு காவல்துறை அதிராம்பட்டினம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

 அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்திருந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  பேரணியை  பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் துவங்கி வைத்தார்.

 பட்டுக்கோட்டை  மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன்   சாலை பாதுகாப்பு விதிகளை பற்றியான விளக்கங்களை அளித்தார்.

மேலும் இவ்விழாவில் அதிராம்பட்டினம் நகர்மன்ற தலைவியின் கணவர் அப்துல் கரீம்,துணைத்தலைவர் இராம.குணசேகரன், நகராட்சி ஆணையர் மதன்ராஜ்,அதிராம்பட்டினம்  காவல்துறை ஆய்வாளர் முருகேசன்,ரோட்டரி சங்க சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தலைவர் சமீரன் நிவாஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். 


அதிரை ரோட்டரி சங்க சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி காணொலி.!







Post a Comment

Previous Post Next Post