அதிரை புதிய நகராட்சி ஆணையரை எஸ்டிபிஐ கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து.!



 தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் புதிய நகராட்சி ஆணையரை எஸ்டிபிஐ கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு புதிய ஆணையராக மதன்ராஜ் நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்ற ஆணையரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து கௌரவித்தனர்.மேலும் சிறப்பாக செயல்படவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

 பட்டுக்கோட்டை தொகுதி தலைவர் அகமது அஸ்லம்,நகர பொருளாளர் ஜமால் முகமது,செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Post a Comment

Previous Post Next Post