பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்பின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட்டது. இன்று (ஜனவரி 9) முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு நிதி நெருக்கடி, பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கம் வழங்கப்படவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்காததற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணிக் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் ரூ.1,000 இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது. 1.14 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 இன்றே வரவு வைக்கப்பட்டுள்ளது
Post a Comment