தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜுமுஆ பள்ளிவாசலில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு கிளை தலைவர் நசுருதீன் தலைமை வகித்தார்,மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ்,மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டு 32யூனிட் இரத்தம் தானம் செய்யப்பட்டது.இதில் பெறப்பட்ட இரத்தத்தை மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ் அவர்கள் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் G.சுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இம்முகாமை கிளை நிர்வாகிகள் இஸ்மாயில்,ஃபத்தாஹ்,இப்ராம்ஷா,சாகுல்,ஜலால்,ஜகுபர் சாதிக் மற்றும் முஹம்மது உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
Post a Comment