அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் புறக்கணித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் தாம் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்ததாகவும் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா திமுக ஏற்கனவே பல்வேறு அணிகளாக பிரிந்துள்ளன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுகவின் அணிகள் ஒருங்கிணையுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிமுக தொடர்பான வழக்குகளிலும் விரைவில் நீதிமன்ற தீர்ப்பு வர இருக்கிறது.
இந்த விழா தொடர்பாக டிஜிட்டல் போர்டுகள், தட்டிகள் வைத்த போதுதான் என் கவனத்துக்கும் வந்தது. ஆகவே, என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் திருவுருவப் படங்கள் இல்லை. இத்திட்டத்தைக் கொண்டு வருவதற்காக 2011-ல் ஜெயலலிதா ரூ.3.75 லட்சம் வழங்கினார். இன்றைய அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடங்குவதற்கு ஜெயலலிதா அடித்தளமாக இருந்தார். அவரது படம் இந்த நிகழ்ச்சியில் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
செங்கோட்டையனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக சீனியர்கள் சிலரும் தங்களது கலகக் குரலை வெளிப்படுத்தக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
Post a Comment