தஞ்சையில் நடந்து முடிந்த மாபெரும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு மீளாய்வு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
திருவாரூர் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட அலுவலகத்தில் வைத்து தஞ்சையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு மீளாய்வு கூட்டம் தஞ்சை மண்டலத் தலைவர் மற்றும் தேசிய பொது குழு உறுப்பினர் A. தப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட பொது செயலாளர் JBR ரியாஸ் அஹ்மது வரவேற்று பேசினார்.
தஞ்சை மண்டல தலைவரும், தேசிய பொது குழு உறுப்பினருமான A. தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து முன்னிலை வகித்த நாகை மாவட்டத் தலைவர் ஷேக் அலாவுதீன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் ஷபீக் முஹம்மது, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் AG. நிஜாமுதீன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் U. செய்யது அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வை நாகை மாவட்ட பொது செயலாளர் யாமின் தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ் மாநில பொது செயலாளர் A. அபு பக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாநாடு குறித்த நிறை குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகிழ்வில் தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டத் தலைவர் மற்றும் பொது செயலாளர்கள், தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தஞ்சை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ் மாநில பொது செயலாளர் A. அபு பக்கர் சித்திக் அவர்களுக்கும், தலைமை தாங்கிய தேசிய பொது குழு உறுப்பினர் மற்றும் தஞ்சை மண்டல தலைவர் A. தப்ரே ஆலம் பாதுஷா அவர்களுக்கும் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட பொது செயலாளர் JBR ரியாஸ் அஹமது அவர்களுக்கும் சால்வை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
இறுதியாக திருவாரூர் மாவட்டத் தலைவர் மாஸ் அப்துல் அஜீஸ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Post a Comment