தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி மைதானம் சீரமைக்கப்படும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புதர்களும்,செடிகளும் மண்டி கிடக்கிறது அதனை சீரமைக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் கோரிக்கை மனுவிற்கு பதிலாக விரைவில் மைதானம் சீரமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment