அதிரையில் ஜக்காத் விழிப்புணர்வு கருத்தரங்கம்.!

 


தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் “ஸகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது. 

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையேற்று உரையாற்றினார். மாநிலப் பொருளாளர் மௌலானா முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹி நெறியாளுகை செய்தார். அதிரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மாவட்ட தலைவர் காஜா முஹ்யித்தீன் மிஸ்பாஹி வரவேற்புரையாற்றினார்.

 மாநிலத் துணைத்தலைவர் மௌலானா B.M. ஜியாவுத்தீன் பாகவி துவக்கவுரையாற்றினார். 

துணைப்பொதுச்செயலாளர் மௌலானா இல்யாஸ் ரியாஜி “ஸகாத் ஒரு சர்வதேசப் பார்வை” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

மேலப்பாளையம் மௌலானா முஹம்மது முஸ்தபா மஸ்லஹி ஸகாத் குறித்த அடிப்படைத் தகவல்களை எடுத்துரைத்து பார்வையாளர்களின் ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கினார்.

ரியல் எஸ்டேட், வங்கியின் சேமிப்பு, வியாபாரம், ஆபரணங்கள், விவசாயம், உயிரினங்கள், வாடகை வீடுகள், ஆண்டு வருமானம் ஆகியவற்றின் ஸகாத் குறித்து விரிவான விளக்கங்களை எடுத்துரைத்தார்.

அதிராம்பட்டினம் அனைத்துப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், ஆலிம்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

அதிரை வட்டார செயலாளர் மௌலவி முஹம்மது மீரான் காஷிபி நன்றியுரை நிகழ்த்தினார் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி துணை முதல்வர் மௌலானா முஹம்மது நெய்னார் ரஹ்மானி துஆ ஓதினார்கள்.




Post a Comment

Previous Post Next Post