அதிரையில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!



மனித நேய மக்கள் கட்சி, அதிராம்பட்டினம் நகரம், தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இத்ரீஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட பொருளாளர்  ஜஹபர் அலி, மாவட்ட மமக துணை செயலாளர் முகமது இலியாஸ்,  மாவட்ட தமுமுக துணை செயலாளர்கள் நைனா முகம்மது, பெரோஸ் கான், அதிராம்பட்டினம் நகர தலைவர் முகமது அஸ்லாம்  நகர மமக செயலாளர் சகுபர் சாதிக், நகர பொருளாளர் முகமது யூசுப், மதுக்கூர் பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது, மல்லிப்பட்டினம் கிளை தலைவர் செய்யது புகாரி , பட்டுக்கோட்டை நகர தலைவர் முகமது யூசுப், நரியன் காடு கிளை தலைவர்  முஹம்மது உசேன், துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்  அப்துல் பகத் வரவேற்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு அணி, மாநில பொருளாளர் திருவை.சையது அலி, அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்

அதிராம்பட்டினம் நகர்மன்ற துணை தலைவரும் - திமுக கிழக்கு நகர செயலாளர். இராம.குணசேகரன், மமக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இறுதியாகஅதிராம்பட்டினம் தமுமுக நகர செயலாளர்  ஹாஜாமுகைதீன் நன்றி உரையாற்றினார்.







Post a Comment

Previous Post Next Post