ரியாத்தில் கடந்த திங்கட்கிழமை (24-02-2025) அன்று மாரடைப்பால் மரணமடைந்த தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த அரபு மீராஷா (எ) முகைதீன் பிச்சை (வயது 55) அவர்களின் நல்லடக்க ஏற்பாடுகளை ரியாத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஜமால் சேட் அவர்களின் முயற்சியால் முடிக்கப்பெற்று இன்ஷா-அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை (28-02-2025) ஜும்மா தொழுகைக்குப்பின் ரியாத் அல்ராஜிஹ் பள்ளியில் தொழுகை வைக்கப்பட்டு நசீம் மையவாடியில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவரை நல்லடக்கம் செய்ய உதவுவதற்கு அல்லாஹ்வின் உவப்பைப் பெற வேண்டி வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் அவருடைய நல்லடக்கத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
*Location : Al-Rajhi Mosque Exit 15*
https://maps.app.goo.gl/VdCbVW5Qc1RUitLa8
Location : மையவாடி
https://maps.app.goo.gl/nDyUN8VT125UvDum7
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று பிரார்த்திப்போமாக!
“மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ‘கிராத்’ அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ‘கிராத்’ அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு ‘கிராத்’ என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
Post a Comment