அதிரை அபூபக்கர் மற்றும் ஸ்ரீ டிவி மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் காவல்நிலையத்தில் புகார் மனு.!

 


தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படும் அதிராம்பட்டினம் அபூபக்கர் மீதும்,ஸ்ரீ டிவி சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது புகார் மனு அளித்தார்.

புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் SDPI கட்சியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகின்றேன், எங்கள் கட்சி கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும், கொரானா பெருந்தொற்று காலத்திலும். கொரானாவால் இறந்தவர்களை ஜாதி மதம் பார்க்காமல் இந்தியா முழுவதும் அடக்கம் செய்து மக்கள் பணியில் தேசிய அளவில் SDPI கட்சி இருந்து வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த அபுபக்கர் என்பவர், M.K.N மதரஸா சம்மந்தமாக வக்ஃப் போர்டுக்கு அனுப்பிய கடிதத்தில், SDPI கட்சி சிலரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, M.K.N மதரஸாவை SDPI கட்சி தன் வசமாக மாற்ற முயற்சி செய்வதாக உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியை, SDPI கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் தமிழ்நாடு வக்ஃப் போர்டுக்கு அனுப்பிவிட்டு, அதனை ஸ்ரீ டிவிக்கு அனுப்பி அதனை விவாதமாக்கி, ஸ்ரீ டிவி நெறியாளர்களான பிரியா வெங்கட் என்பவரும், பால.கவுதமன் என்பவரும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாத சிந்தனையுடன் இருப்பதாக கூறி அதனை விவாதமாக மாற்றிய வீடியோ ஒன்றை கடந்த 25-02-2025 அன்று சமூக வலைத்தளத்தில் கண்டேன். இதனால் எங்கள் ஊர் மக்கள் இஸ்லாமிய மக்கள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார்கள், மேலும் மக்கள் மத்தியில் எங்கள் கட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்கியதோடு, அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பதட்டத்தையும் உண்டாக்கியிருக்கிறார்கள், இதனால் எங்கள் கட்சி தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை கடும் மண உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், இதனால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொது மக்களிடையே ஒரு பதட்டமான சூழல் உருவாகி உள்ளது, SDPI கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி, பொது அமைதியை சீர் குலைத்து, கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் அபுபக்கர் மீதும், இஸ்லாமியர்கள் மீது தவறான தகவலை பரப்பி வரும் ஸ்ரீ டிவி யூடியுப் பக்கத்தை தடைசெய்து நெறியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.





Post a Comment

Previous Post Next Post