மமக தலைவருடன் மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன் சந்தித்து நலம் விசாரிப்பு.!

 


மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து அக்கறையுடன் தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் மல்லிப்பட்டினம் தாஜூதீன் நலம் விசாரித்தார்.

கடந்த சிலநாட்களாக மருத்துவரின் ஆலோசனையின்பேரில் வீட்டில் ஓய்வெடுத்து கட்சி,இயக்க பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன் பேராசிரியரை சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் விரைவில் பூரண குணமடைந்து முன்பைவிட வீரியமாக களப்பணியாற்றிடவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



Post a Comment

Previous Post Next Post