மமக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் இல்ல திருமணம்,மாநில துணை பொதுச்செயலாளர் பங்கேற்பு.!

 


மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் பகத் இல்ல திருமண விழாவில் மாநில,மாவட்ட,நகர,கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மமக மாவட்ட செயலாளர் அப்துல் பகத் அண்ணன் அப்துல் வஹாப் மகள் திருமணவிழா நிகழ்ச்சி மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது.மமக மாநில துணைப்பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக தமுமுக மக்கள் உரிமை,நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர்  தீன் முகமது,மாவட்ட தலைவர் இத்ரீஸ் அகமது,தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக்,மாவட்ட நிர்வாகிகள் முகமது இல்யாஸ்,மல்லிப்பட்டினம் கிளை தலைவர் செய்யது புகாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.மேலும் மதுக்கூர்,அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் தமுமுக மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post