சமூக பாதுகாப்பு மாநாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அறிவிப்பு !


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தஞ்சை ஈஸ்வரி நகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ்,மாவட்டப் பொருளாளர் ஜாஃபர் சாதிக்,மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி,மாவட்ட துணைச் செயலாளர் சேக் அப்துல் காதர், அப்துல்லாஹ்,மாவட்ட மாணவரணிச் செயலாளர் இத்ரீஸ் மற்றும் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் முஸதாஃபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அதிராம்பட்டினத்தில் சமூக பாதுகாப்பு மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பிஜெபி வெற்றி பெற்று 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக காங்கிரஸின் தலைமையை கேள்விக்குள்ளாகியதும் ஒற்றை அணியாக இந்த தேர்தலை காங்கிரஸ் சந்திக்க தவறியதும் தோல்விக்கான காரணங்களாக பார்க்கப்படுகின்றன , வருங்காலங்களிலாவது சுயநலன்களை விட்டு நாட்டின் நலனுக்கு எதிர்கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் தர்காவை பயன்படுத்துவதற்கும் அங்கே இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் தங்கள்

நம்பிக்கையின் அடிப்படையில் செய்யும் நடைமுறைகளையும் நிறுத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட சங்க பரிவாரங்கள் பிரச்சினை

செய்கின்றன, பொய் பிரச்சாரங்கள் செய்து இரு பிரிவினருக்கிடையே பிளவை ஏற்படுத்த நினைக்கும் சங்க பரிவாரங்களின் முயற்சிகளையும் அதற்கு உடந்தையாக இருக்கும் மாவட்ட அரசு நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது, பிளவை ஏற்படுத்தும் இது போன்ற சக்திகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட 

வேண்டும், தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் செயல்படக்கூடிய பாஜக உள்ளிட்ட சங்கபரிவாரத்தினர் கைது செய்யப்பட

வேண்டும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மதுரை மாவட்டத்தின் அரசு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றிய பட்ஜெட்டில் அடித்தட்டு மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர், வழக்கம் போல் நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது

பட்ஜெட்டின் 5 ல் ஒரு பகுதி வாங்கிய கடனை திருப்பி கொடுக்க ஒதுக்கப்பட்டுள்ளது, விலைவாசி உயர்வை குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும்

எடுக்கப்படவில்லை, சிறு குறு தொழில்களுக்கு எந்த நன்மையும் இந்த பட்ஜெட்டால் கிடைக்கவில்லை, மறைமுக வரியின் மூலம் 

மக்கள் தொடர்ந்து சுரண்டப்படுகின்றனர், ஏழை மக்களுக்கு எதிரான இந்த பட்ஜெட்டை இந்த கூட்டத்தின் வாயிலாக வன்மையாக

கண்டிக்கின்றோம் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post