பேராவூரணி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா

 


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை(பிப்.7) மாலை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பெ. பழனிவேல் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுகன்யா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கவிதா வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் இராஜஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்தார். திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன் இலக்கிய உரையாற்றினார்.

பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் பல்வேறு போட்டங்களில் வெற்றி பெற்ற, படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், அட்மா தலைவர் க. அன்பழகன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் முருகேசன், தலைமை ஆசிரியர் கவிதா, ஆசிரியர் பயிற்றுநர் அ. ரா.சரவணன் மற்றும் கிராமத்தார் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post