டெல்டா பகுதிகளுக்கு 48 மணி நேரம் மழை வாய்ப்பு.!

 


நாளை அதிகாலை அல்லது காலை முதல் தமிழகத்தில் மழை துவங்கும்.

48 மணி நேரத்திற்கு இந்த சுற்று மழை எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் தென் உள் மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது 

மேலும் சிவகங்கை ,மதுரை, விருதுநகர், தேனி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் , செங்கல்பட்டு ,திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் , சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே , ஆங்காங்கே மழை வாய்ப்பு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post