சென்னை நந்தனம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் , மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழ்நாடு மீனவர் நலவாரிய 10வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு மீனவர்கள் நிலை குறித்தும், மீனவர்களுக்கு நிதிநிலை பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் நிதி நிலையை கூடுதலாக்குவது குறித்தும் பேசப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன், அலுவல் சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment