பேராவூரணி வட்டாட்சியர் பொறுப்பேற்பு.!

 


தஞசாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியராக சுப்பிரமணியன் பொறுப்பேற்றுக் கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதையடுத்து, பேராவூரணி வட்டாட்சியராக பணியாற்றி வந்த தெய்வானை பட்டுக்கோட்டை கோட்ட கலால் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக இருந்த சுப்பிரமணியன் பேராவூரணி வட்டாட்சியராக நியமிக்கபபட்டார். இதையடுத்து சுப்பிரமணியன் பேராவூரணி வட்ட அலுவலகத்தில், வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

Post a Comment

Previous Post Next Post