தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கிராம பஞ்சாயத்து கமிட்டி சார்பாக ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு காஸா உடன் நாங்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்து ,போர் நிறுத்த விதிகளை மீறி காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து தேசம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக மல்லிப்பட்டினம் ஜும்ஆ பள்ளி எதிரே கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாஹீர் தலைமையில் கண்டன முழக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டனம் முழக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
இதில் ஜமாத்தார்களும், பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.
Post a Comment