தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் ரேசன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் அகமது குற்றச்சாட்டு.
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் ரேசன் கடையில் பொருட்கள் முடிந்துவிட்டது என்று பொதுமக்களிடம் கூறிவிட்டு கள்ள சந்தையில் ரேசன் பொருட்கள் விற்கப்படுவதாகவும்,பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து ரேசன் கடை ஊழியரிடம் கேட்டதற்கு முன்னுக்குபின் முரணாகவும்,முடிந்தால் புகார் அளித்து கொள்ளுங்கள் என்ற என்ற அதிகாரத்துடன் பேசியதாகவும் தெரிவித்தார்,இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வாழ்வுரிமை கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment