மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி எஸ்டிபிஐயின் தேசியதலைவர் எம் கே ஃபைஸி அவர்களை டெல்லியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதுஅப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.
ஒன்றிய அரசு தனது கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் மீது அமலாக்கத்துறையை ஏவி ஒடுக்கும் செயலை தொடர்ந்து செய்து வருகிறது. வெகு மக்களுக்குச் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தவறான புரிதல் ஏற்பட வேண்டும் என்ற தீய நோக்கத்திற்காக இந்தியப் புலனாய்வு அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. எம் கே ஃபைஸி கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment