தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி கைதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜி நேற்று(மார்ச்.4) பெங்களூரில் வைத்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.இதனை கண்டித்து நாடுமுழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட துணைத்தலைவர் அகமது அஸ்லம் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அசாருதீன்,மாவட்ட செயலாளர் முகமது ரஹீஸ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக்தாவூது,அதிமுக அதிரை நகர செயலாளர் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையுரையாற்றினார்.மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் நிர்வாகம் முகமது புகாரி ஆகியோர் தேசிய தலைவர் பைஜி கைது குறித்தும், நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் கண்டன உரையாற்றினர்.
அதிரை நகர செயலாளர் பாரிஸ் அகமது கண்டன கோஷங்களை எழுப்பினார்.இறுதியாக மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கிராம பஞ்சாயத்து தலைவர் ஜவாகீர் நன்றியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு ஒன்றிய அரசு மற்றும் அமலாக்க துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
Post a Comment