மே 1 முதல் 31 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை எஸ்டிபிஐ தஞ்சை மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்.!


தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஏப்-26 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர கட்சி அலுவலகத்தில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் AG நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாக பொது செயலாளர் N. முஹம்மது புஹாரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் AG நிஜாமுதீன் தலைமையுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தஞ்சை மண்டல தலைவர் A.தப்ரே ஆலம் பாதுஷா சிறப்புரை வழங்கினார்.

 இதில் தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பு பொது செயலாளர் S. அசாருதீன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் A. அன்வர், ஒன்றிய செயலாளர் வஹி முஹம்மது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

மே-1 முதல் மே-31 வரை எஸ்டிபிஐ கட்சியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தகர் அணி, விமன் இந்தியா மூவ்மெண்ட், விவசாய அணி, மீனவரணி, SDTU, பொறியாளர் அணி, மக்கள் தொடர்பு, தொழில் நுட்ப அணி, ஊடக அணி, மருத்துவஅணி, தொண்டரணி, சட்ட ஆலோசகர், வழக்கறிஞர் அணி கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

மே மாதம் பார்ட்டி கன்வெண்ஷன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த வேண்டும்.

கோடை கால தண்ணீர் பந்தல் அனைத்து கிளைகளிலும் வைக்க வேண்டும், மற்றும் வைக்கப்பட்ட இடங்களில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இறுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் J. ரியாஸ் அஹமது நன்றியுரை நிகழ்த்தினார்.

Post a Comment

Previous Post Next Post