தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை அன்று குருவிக்கரம்பை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, சேதுபாவாசத்திரம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மா.க. இராமமூர்த்தி, சுப. சிவசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். 2024-2025 ஆண்டு நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் மற்றும் வருவாய் படிப்பு தேர்வில் வெற்றி பெற்று அரசின் உதவித்தொகை பெறுவதற்கு தேர்வான சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பள்ளிகளைச் சேர்ந்த மல்லிப்பட்டினம் நூருல் ரீஃபா, நிரஞ்சனா, யாழினி, அஸ்மிதா, தனுஸ்ரீ, பாலாஜி, மகேச ரமணா, மணிகண்டன், பிரகதா ஆகிய 9 மாணவர்களுக்கு கேடயம் வழங்கி, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
மேலும், மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலும், பள்ளி அளவிலும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது
Post a Comment