அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க மே 15 வரை கால அவகாசம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம்.!

 


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க மே 15 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளின்படி தமிழில் வைக்க வேண்டும். இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டப்படகியும், தொழிற்சாலைகள் சட்ட விதிகளின்படி அனைத்து தொழிற்சாலைகளிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். கண்காணிப்புக் குழுவின் மூலம், தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி,100 சதவீதம் தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே தமிழில் பெயர் பலகை வைக்க மே-15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post