மீனவர்களுக்கு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் நன்றி.!

 


மீனவர்களுக்காக தமிழக முதல்வர்  மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் மீனவர் வாழ்வாதாரம் இழந்து தவித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மிகவும் பயனளிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துள்ளார். 

மேலும் மிகவும் துயரமான நேரத்தில் மீனவர்களுக்காக அறிவித்தமைக்காக தமிழக மீனவர்களின் சார்பாக முதல்வர், துணை முதல்வர் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சருக்கும்,தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டும், படகுகளை சிறைபிடித்து அவற்றை பறிமுதல் செய்த மையினால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின்  பிரதமர்  இலங்கை சென்று மீனவர்களுக்காக நிச்சயம் பேசி சுமூக நிலை ஏற்படுத்தி மீனவர்களின் படகுகளையும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் விடிவித்து தருவார் என்ற அதிதீீத நம்பிக்கையுடன் இருந்த மீனவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த சூழ்நிலையில் தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் நான் இருக்கிறேன் என்ற வார்த்தையுடன் மீனவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் பாக் ஜலசந்தி மீனவர்களான ராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சாவூர்,நாகப்பட்டினம் மீனவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையிம் அறிவித்து இன்று  மீனவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி அவர்கள் வயிற்றில் பால்வார்த்த  தமிழக முதல்வர்  மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .


Post a Comment

Previous Post Next Post