வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி தஞ்சையில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்.!

 


தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முஸ்லீம்களை வஞ்சிக்கும் வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர மாவட்ட செயலாளர் நாஞ்சி.இடிமுரசு,மைய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர்,வடக்கு மாவட்ட செயலாளர் முல்லை வளவன்,மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன்,தெற்கு மாவட்ட செயலாளர் அரவிந்த் குமார்,கும்பகோணம் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப்பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் கலந்துக்கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி,தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அரங்ககுரு,மைய ஒன்றிய செயலாளர் மறியல் வினோத்,ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி  தென் தமிழன்,சேதுபா சித்திரம் ஒன்றிய செயலாளர் முருகேசன்,பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பொண்ணை நாகேந்திரன்,திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்,இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தஞ்சை தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் விளார் துரை சிவா புதுப்பட்டினம் நகரச் செயலாளர்  முகமது சுல்தான் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.






Post a Comment

Previous Post Next Post