மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது,படகுகளை சீரமைக்க மானியம் வழங்க மீனவர் பேரவை பொதுச்செயலாளர் கோரிக்கை.!

 


தமிழகத்தில் வருடந் தோறும் நடைமுறையில் உள்ள 61 நாட்கள் கொண்ட ஆழ்கடல் மீன் பிடித் தடைக்காலம் இந்தாண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அமலில் இருக்கும். இதன் காரணமாக, அடுத்த வாரம் தொடங்கி மீன்கள் மற்றும் இறைச்சிப் பொருட்களின் விலையில் உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆரம்பத்தில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த சில ஆண்டுகளாக 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தடைக் காலம், கடல் உயிரின இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது. அதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20,000 விசைப் படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படாமல் துறைமுகங்களிலும், இறக்குமதி தளங்களிலும் நிறுத்தி வைக்கப்படும்.தடைக்காலம் தொடங்கி இருப்பதால் மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளில் உள்ள பொருட்களை பாதுகாக்கும் வண்ணம் பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.

மீன் பிடி தடை காலத்தில் மீன் பிடித் தொழில் முற்றிலும் நிறுத்தப்படுவதால், மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8,000 நிவாரணமாக வழங்குகிறது. மேலும், இந்த தடை காலத்திலேயே மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மீன் பிடி தடைக்காலத்தில் மீன்களின் விலையில் உயர்வு காணப்படும்.

இதுகுறித்து மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர்  தாஜூதீன்  கூறியதாவது: பிற மாநிலங்களில், குறிப்பாக கேரளாவில் பருவ மழை தொடங்கும் நேரத்தில் மீன் பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மாறாக நடைபெறுகிறது. எனவே, அக்டோபர் நவம்பர் வரையிலான வடகிழக்கு பருவ மழை காலத்தில் தான் தடைக் காலம் அமல்படுத்தப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

மேலும் தற்போதைய நிவாரணத்தொகை தமிழக அரசு ரூ.8,000 வழங்குகிறது,இதனோடு ஒன்றிய அரசும் சேர்ந்து ரூ.25000 வழங்க வேண்டும், விசைப்படகு பராமரிப்பு பணியை மேற்கொள்ள பழுதுகேற்ப அரசு மானியம் வழங்கிட வேண்டும் என்று மீனவர்கள் வைத்துள்ளனர்.






Post a Comment

Previous Post Next Post