உள்ளாட்சிகளில் மாற்றுதிறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் இயற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் பட்டுக்கோட்டையில் ஏப்.17ல் வியாழக்கிழமை கல்யாண சுந்தரனார் மணிக்கூண்டு அருகில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த மாற்றுத்திறனாளி நியமன சட்ட முன் வடிவின் படி, தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், புதிய சட்டம் மூலம் இது 650 ஆக உயரும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 13,268 மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி கிடைக்கும்.
Post a Comment